Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘யாருக்காவது ரத்தம் வேணுமா... என்னைக் கூப்பிடுங்க!’ - 105 முறை ரத்ததானம் செய்தவர்

``ரத்தம் கொடுத்தால் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கைதான் எனக்குத் தூண்டுகோலாக அமைந்தது. அதே உற்சாகத்தில் 105 முறை ரத்ததானம் செய்து, பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளேன்'' - வார்த்தைகளில் பெருமிதம் பொங்கப் பேசுகிறார்  55 வயது முதியவரான கோபால்.

ரத்தம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலகக் குருதிக் கொடையாளர் தின விழிப்புஉணர்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பஷீர், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இணை இயக்குநர் டாக்டர்.சம்சத்பேகம், மாவட்டத் திட்ட மேலாளர் செந்தில்குமார், மாவட்ட மேற்பார்வையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில், கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்ட விழிப்புஉணர்வுப் பேரணியை கலெக்டர் கு.இராசாமணி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இந்தப் பேரணி, புனித வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் முடிவடைந்தது. பேரணிக்கு முன்னதாக, தன் வாழ்நாளில் 50 முறைக்குமேல் தொடர்ந்து ரத்ததானம் செய்த கொடையாளர்களைக் கௌரவிக்கும் வகையில் ஒரு வருடத்தில் இரண்டு முறைக்குமேல் ரத்ததானம் செய்த பெண்களுக்கும், மூன்று முறைக்குமேல் ரத்ததானம் செய்த ஆண்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.  இதில் 105 முறை ரத்ததானம் செய்த கோபால், 86 முறை ரத்ததானம் செய்த பாலசுந்தரம், கனகராஜ், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோரும் 13 முறை ரத்ததானம் செய்த செல்வராணி, 8 முறை ரத்ததானம் செய்த பிரியா, லதா உள்ளிட்ட பெண்களும் அடங்குவர்.

பேரணியைத் தொடங்கிவைத்துப் பேசிய கலெக்டர் கு.இராசாமணி... “திருச்சி மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இரண்டு ரத்த வங்கிகள் செயல்பட்டுவருகின்றன. இவற்றிலிருந்து 115 ரத்ததான முகாம்கள் மற்றும் ரத்த வங்கிகள் மூலம் 9,305 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் 11 தனியார் ரத்த வங்கிகள் செயல்பட்டுவருகின்றன” என்றார்.

ரத்தம்

இந்த விழாவில் 105 முறைக்கும்மேல் ரத்ததானம் செய்த திருச்சி கே.கே.நகர் பாரதி தெருவைச் சேர்ந்த கோபால் என்ற 55 வயது முதியவருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுகுறித்து அவர் நம்மிடம் பேசியதாவது, “இதற்கு முன்னர் சென்னை மயிலாப்பூரில் குடியிருந்தோம். படிப்பு, வேலை, திருமணம் அனைத்தும் அங்குதான். இப்போது ரத்ததானம் குறித்துப் பரவலாக விழிப்புஉணர்வு உண்டாகியிருக்கிறது. அப்போது எனக்கு 18 வயது இருக்கும். எங்கள் ஏரியாவில் இருக்கும் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து ரத்ததானம் செய்ய ஆரம்பித்தோம். அப்போது சென்னை டி.வி.எஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. விடாமல் ரத்ததானம் செய்து வந்ததோடு, உடன் பணியாற்றிய நண்பர்கள், தெரிந்தவர்கள் எனப் பலரிடமும் ரத்ததானம் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தி ரத்ததானம் செய்யவைத்துள்ளேன்.

கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னையிலிருந்து திருச்சிக்குச் வந்துவிட்டோம். ஒரு வருடத்துக்குப் பிறகு திருச்சி அரசு மருத்துவமனையில் ரத்ததானம் வழங்கும் துறையில் பணியாற்றும் பாலசந்திரன் உள்பட பலரின் அறிமுகம் கிடைத்தது. இவர்களின் ஊக்கத்தாலும் ஆதரவாலும் மீண்டும் ரத்ததானம் செய்ய ஆரம்பித்தேன். 75-வது முறை ரத்ததானம் செய்தபோது, அப்போதைய ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா என்னைப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, விடாமல் தொடர்ந்து ரத்ததானம் செய்துவருகிறேன். என்னைப் பார்த்து என் மகன் கோகுலும் தானம் செய்ய ஆரம்பித்துவிட்டார். பொறியியல் படித்துள்ள அவரும் இதுவரை 13 முறைக்கும்மேல் ரத்ததானம் செய்துள்ளார். கொடுக்கக் கொடுக்க, ரத்தம் உடலில் ஊறிக்கொண்டே இருக்கும். நம்மில் பலர் ரத்ததானம் செய்வதற்குப் பயப்படுகிறார்கள். அப்படிப் பயப்படக் கூடாது. அடிபட்டு ரத்தம் வெளியேறினால் வீணாகத்தானே போகும். ஒருவர் ரத்ததானம் செய்தால், பல உயிர்கள் காய்ப்பாற்றப்படும் அல்லவா! அதனால்தான் ரத்ததானம் செய்கிறேன். யாருக்காவது ரத்தம் வேண்டுமென்றால் என்னைக் கூப்பிடுங்க'' என்றார் கோபால்.

ரத்ததானம் செய்யும் இப்படியான மனிதநேயர்களால்தான் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close