Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெனெல்லி 302R... புக்கிங் ஆரம்பம்!

 

பெனெல்லி 302R

 

ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஃபுல் ஃபேரிங் கொண்ட 300சிசி பைக்கான 302R பைக்கின் புக்கிங்கை, இந்தியா முழுக்க இருக்கும் தனது 25 ஷோரூம்களில் துவங்கிவிட்டது பெனெல்லி. இதில் நேக்கட் பைக்கான TNT 300 பைக்கில் இருக்கும் அதே 300சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், ஃப்ரேம், சஸ்பென்ஷன் ஆகியவற்றில் கணிசமான மாற்றங்கள் இருப்பது கவனிக்கத்தக்கது. சுமார் 190 கிலோ எடையுள்ள இந்த பைக்கை, ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்காகப் பொசிஷன் செய்யவுள்ளது பெனெல்லி.

 

benelli 302R

 

மேலும், இது விற்பனைக்கு வருவதற்கு முன்பே, வாடிக்கையாளர்களிடமிருந்து பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார், DSK மோட்டோ வீல்ஸ் நிறுவனத்தின் சேர்மன் சிரிஷ் குல்கர்னி. பெனெல்லி 302R பைக்கின் உத்தேச விலை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை; என்றாலும், TNT 300 பைக்கின் சென்னை ஆன் ரோடு விலையே, 3.7 லட்சத்தைத் தாண்டும்போது, இதன் சென்னை ஆன் ரோடு விலை 4 லட்ச ருபாயைத் தாண்டுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close