வெளியிடப்பட்ட நேரம்: 10:33 (22/06/2017)

கடைசி தொடர்பு:12:26 (22/06/2017)

குடியரசுத் தலைவர் தேர்தல்: பா.ஜ.க வேட்பாளருக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.  

paneerselvam

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு தரக் கோரி, பா.ஜ.க மாநிலக் கட்சிகளிடம் கேட்டுவருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை இப்தார் நோன்பு முடித்த பின்பு, பேசிய முதல்வர் பழனிசாமி, 'குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த்துக்கு அ.தி.மு.க அம்மா அணி ஆதரவு அளிக்கும்', என்று கூறினார். 

இந்நிலையில் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவளிப்பதாக ஒ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், ‘ராம்நாத் கொவிந்த் அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு அமித்ஷா கேட்டுக்கொண்டார். சிறந்த நிர்வாகி என்பதால்தான் ராம்நாத்துக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க