15 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்கக்கோரி வழக்கு!

15 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர் கல்வித்துறைச் செயலாளர் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ பதில்தர உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Chennai High court Branch


பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்நிலையில்,ஃபாரூக் என்பவர், ஏ.ஐ.சி.டி.இ அனுமதித் தராத 15 பொறியியல் கல்லூரிகளில்  கலந்தாய்வு நடத்த அனுமதி தரக்கூடாது என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ.  மற்றும் உயர் கல்வித்துறைச் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான, கலந்தாய்வு இந்தாண்டு ஜூன் 27-ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்தது. இதனிடையே, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்குப் பிறகு பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!