வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (22/06/2017)

கடைசி தொடர்பு:17:31 (22/06/2017)

சசிகலா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்படுவார்களா? ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் நாளை உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு மாதங்களுக்கு மேல் மருத்துவமனையிலிருந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர், மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த காலத்தில் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. மேலும், அவர் சிகிச்சையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு ஏதும் வெளியிடப்படவில்லை.

அவருடைய சிகிச்சை விவரமும் முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால், அவருடைய இறப்பு குறித்து சந்தேகம் கிளம்பியது. ஜெயலலிதா மரணம் குறித்து எதிர்க்கட்சிகளும் சி.பி.ஐ விசாரணை கோரினர். இதற்கிடையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 186 பேரை விசாரிக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.