போஸ்டர்கள் போச்சு..பொலிவடைந்த அரசுக் கட்டடங்கள்.. நெல்லை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்! | Awareness posters in Tirunelveli corporation buildings

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (22/06/2017)

கடைசி தொடர்பு:19:25 (22/06/2017)

போஸ்டர்கள் போச்சு..பொலிவடைந்த அரசுக் கட்டடங்கள்.. நெல்லை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்!

போஸ்டர்கள், விளம்பரங்களால் அசிங்கப்பட்டுக் கிடந்த அரசு சுவர்கள் அட்டகாசமாக ஜொலிக்கத் தொடங்கி இருக்கின்றன. நெல்லை மாநகராட்சியில் நிகழ்ந்து உள்ள இந்த அதிசயம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Wall Drawing

சாதிய வன்முறைகளுக்குப் பெயர்போன நெல்லை மாவட்டத்தில், அரசுக் கட்டடங்கள் மட்டும் அல்லாமல் விளக்குக் கம்பங்களில்கூட வர்ணம் பூசி தங்களின் சாதிய அடையாளத்தை அம்பலப்படுத்தும் அவலம் நடந்துவருகிறது. இந்த விளம்பரங்களை அழிப்பது, ஒட்டப்பட்ட போஸ்டர்கள்மீது மாற்று சமுதாயத்தினரின் போஸ்டரை ஒட்டுவது என்பது கொலைச் சம்பவத்துக்கு வித்திடுவதாகவும் அமைந்து விடுகின்றன. அரசு சுவர்களில் அனுமதியில்லாமல் போஸ்டர்கள், விளம்பரங்கள் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டபோதிலும், அதை யாரும் பின்பற்றாத நிலைமையே நீடித்துவந்தது. 

இந்த நிலையை மாற்ற நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி, மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் அரசு சுவர்களில் கருத்துப் படங்கள், இயற்கை எழில்கொஞ்சும் வண்ண ஓவியங்கள் மற்றும் ஆக்கபூர்வமான கருத்துகளை எழுத முடிவு செய்தனர். மாநகராட்சிக்குச் சொந்தமான பள்ளிகள், பாலர்வாடி கட்டடங்கள், மண்டல அலுவலகங்கள், நகர்நல மையங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்த திரைப்பட மற்றும் சாதி அமைப்புகளின் போஸ்டர்கள், அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. 

Wall Drawing

மாநகராட்சி பள்ளிகளின் சுவர்களில் திருக்குறள், ஆத்திசூடி, விழிப்புஉணர்வு வாசகங்கள்கொண்ட கருத்துகள் எழுதப்பட்டன. மேலும், மாணவ, மாணவியரின் சிந்தையைக் கவரும் வகையிலான இயற்கை ஓவியங்கள், சுற்றுச்சூழல் மேம்பாட்டை வலியுறுத்தும் கருத்துப் படங்கள், போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக ஓவியங்கள் வரையப்பட்டன. அத்துடன் பிளாஸ்டிக் ஒழிப்பு, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, டெங்கு ஒழிப்பு, சுகாதாரத்தின் அவசியம் குறித்த கருத்துகளும் அரசுக் கட்டடங்களை அலங்கரிக்கின்றன. 

ஃப்ளக்ஸ் போர்டுகளின் வரவால், உள்ளூரில் உள்ள ஓவியர்களின் வேலை கணிசமாகக் குறைந்துவிட்டது. அரசியல் கட்சியினர்கூட இப்போதெல்லாம் சுவர் எழுத்துகளில் ஆர்வம் காட்டுவதைவிடவும் பொது இடங்களில் குறைந்த செலவில் ஃப்ளக்ஸ் போர்டு வைப்பதையே விரும்புகின்றனர். இதனால், தொழில் வாய்ப்பு இல்லாமல் நலிவடைந்த ஓவியர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவதுபோல மாநகராட்சி சார்பாக அவர்களுக்கு இப்போது வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே, அரசுக் கட்டங்கள் பொலிவடையத் தொடங்கியிருக்கிறது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும்