வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (23/06/2017)

கடைசி தொடர்பு:17:55 (23/06/2017)

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்! தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில், தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது!

உயர்நீதிமன்றம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆர்.கே.நகரில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க இரு அணிகளாக பிரிந்து இத்தேர்தலை சந்தித்தது. இதனிடையே ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில், பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பாக ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், பணப்பட்டுவாடா விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு காவல்துறை பதிலளித்துள்ளது. இதுகுறித்து இன்று நடைபெற்ற உயர்நீதிமன்ற விசாரணையின்போது, காவல்துறை தரப்பில் சி.டி ஆதாரம் சமர்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பணப்பட்டுவாடா தொடர்பான பட்டியலும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக தேர்தல் ஆணையம், தமிழக அரசு மற்றும் தேர்தல் அதிகாரி, சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.