பேரறிவாளன் பரோல் விவகாரம்.. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்கள்!

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் பேரறிவாளன் பரோல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். 

m.k.stalin
 

நேற்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேரறிவாளன் பரோல் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து பேச பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்   நேற்று சட்டசபைக்கு சென்றார். இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேரறிவாளன் பரோல் பற்றிப் பேசிய ஸ்டாலின் ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரையும் விடுதலை செய்ய ஏற்கெனவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பேரறிவாளனுக்கு பரோல் வழங்க தயங்குவது ஏன்? பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா மாநில அரசுதான் பரோல் வழங்கியது. அதேபோல் பேரறிவாளனுக்கும் தமிழக அரசு பரோல் வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தார். 

பேரறிவாளன் பரோல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தததற்கு அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

இதனிடையே நீட் தேர்வு குறித்து தி.மு.க-வின் துரைமுருகன் பேரவையில் கேள்வியெழுப்பினார். நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது; நீட் தேர்வால் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!