வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (24/06/2017)

கடைசி தொடர்பு:13:26 (24/06/2017)

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

அக்னி நட்சத்திர முடிவுக்குப் பின்னர் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழையும் வலுவடைந்து வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பரவலாக சில நாள்களாக மழை பெய்து வந்தாலும் திருப்திகரமான மழைப்பொழிவு இல்லை. இந்நிலையில், கடும் வெயிலுக்கு இரையாகிவந்த சென்னையில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. திருவள்ளுர் மாவட்டத்தில் பொன்னேரி, பழவேற்காடு பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில இடங்களிலும்  மழை பெய்தது. இதில் அதிகப்பட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்றும் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் காலையிலிருந்தே வானம் மேகமூட்டமாகவே காணப்படுகிறது.