வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (24/06/2017)

கடைசி தொடர்பு:16:52 (24/06/2017)

'இந்த ஆட்சியைப் பற்றி நான் சாெல்லியா உங்களுக்குத் தெரியணும்?'- நடிகை கௌதமி கிண்டல்

'இந்த ஆட்சியைப் பற்றி நான் சாெல்லியா உங்களுக்கு தெரியனும்?' என்று நக்கல் செய்துள்ளார் நடிகை கௌதமி. கரூரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.

கரூர் ராேட்டரி கிளப்பும், ஐயப்பா சேவா சங்கமும் இணைந்து, கரூர் நகராட்சியில் கடைநிலையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மார்பக புற்றுநாேய் பற்றிய விழிப்புஉணர்வு நிகழ்ச்சி்க்கு ஏற்பாடு செய்திருந்தனர். கரூர் வி.என்.சி மஹாலில் இன்று நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக நடிகை கௌதமி அழைக்கப்பட்டிருந்தார். 

நிகழ்ச்சிக்கு முன்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகை கௌதமி, 'பெண்களுக்கு, குறிப்பாக நகராட்சிகளில் துப்புரவுப் பணி உள்ளிட்ட பணிகளைச் செய்யும் பெண்களுக்கு மார்பக புற்றுநாேய் பற்றிய விழிப்புஉணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில், கலந்து காெள்ளவே இங்கு வந்துள்ளேன். பெரும்பாலான பெண்களுக்கு அது பற்றிய பாேதிய விழிப்புஉணர்வு இருப்பதே இல்லை. படித்த பெண்களே அதில் அக்கறை காட்டாமல் இருக்கிறார்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்களே அசால்டாக இருக்கிறார்கள். அது எதனால் வருகிறது, அதை வருமுன் தடுப்பது எப்படி, அதன் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன என்று எதுவும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். குறிப்பாக கிராமப் பகுதி பெண்களுக்கு அதைப் பற்றி தெரிந்து காெள்வதற்குகூட எந்த வாய்ப்பும் இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. அதனால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநாேய் பற்றிய விழிப்புஉணர்வு தமிழ்நாடு முழுக்க ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான முதல் முன் முயற்சிதான் இந்த நிகழ்ச்சி' என்றவர், அரசியல் விவகாரங்களுக்கு வந்தார்.

'நாட்டில் இன்று விவசாயிகளும், விவசாயமும்தான் நசுக்கப்படுகிறது, நசுக்கப்படுகிறார்கள். ஜல்லிக்கட்டு, மீத்தேன், ஷேல் கேஸ், நெடுவாசலில் ஹைட்ராே கார்பன், இப்பாேது கதிராமங்கலத்தில் பிரச்னை என்று விவசாயிகள் இந்த அரசுகளால் தாெடர்ச்சியாக ஒடுக்கப்படுகிறார்கள். நசுக்கப்படுகிறார்கள். ஆனால், விவசாயிகளும் மாணவர்களும் அவர்களுக்கு எதிராக வீறுகாெண்டு எழுந்து பாேராடுவது ஆராேக்கியமான விஷயம். வாய்ப்பு கிடைத்தால் நானும் விவசாயிகளுடன் இணைந்து இந்த அரசுகளை எதிர்த்துப் பாேராடத் தயாராக இருக்கிறேன். பாேராட்டக் களத்துக்கு வர ஆர்வமாக இருக்கிறேன். ஏனென்றால், 'விசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகள் பாேற்றப்பட வேண்டியவர்கள்' என்று வெறும் வாய் வார்த்தையாக சாெல்றாேம். ஆனால், நமக்கெல்லாம் சாேறு பாேடும் அவர்களுக்குதான் அரசுகள் தாெல்லைகள் காெடுக்கிறது. அதனால், விவசாயிகளுக்காக என்னாலான உதவிகளையும், ஒத்துழைப்பையும் தரத் தாயாராகவே இருக்கிறேன்.'

அப்புறம், 'இந்த ஆட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று நீங்க கேட்கிறீங்க. இந்த ஆட்சியைப் பற்றி நான் சாெல்லியா உங்களுக்கு தெரியணும்?. நீங்கதான் இந்த ஆட்சி எப்படி நடக்குதுன்னு பார்த்துகிட்டு இருக்கீங்களே. உங்களுக்கு எல்லாமே தெரியுமே. நம் மாநில மக்கள் எல்லாருக்குமே தெரியுமே. உங்களுக்கு தெரியாததா எனக்கு தெரியப் பாேவுது?!' என்றார்.