தமிழகம் முழுக்க 142 பள்ளிகளைத் திறந்து வைத்த முதல்வர்!

தமிழகம் முழுவதும் 142 பள்ளிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். கரூர் மாவட்டத்தில் மட்டும் ஆறு உயர்நிலைப் பள்ளிகளைத் திறந்து வைத்தார் முதல்வர்.

9 கோடியே, 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழகம் முழுக்க 142 அரசுப் பள்ளிகளைத் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி. கரூர் மாவட்டத்தில் 9 கோடியே, 64 லட்சம் மதிப்பீட்டில் 6 உயர்நிலைப் பள்ளிகளை திறந்து வைத்தார் முதல்வர். அதையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் முதல்வர் திறந்து வைத்த 6 உயர்நிலைப் பள்ளிகளில் ஒன்றான கரூர் ஊராட்சி ஒன்றியம், ஆத்தூர் உயர்நிலைப் பள்ளி்க்கு விசிட் அடித்தார். குத்துவிளக்கேற்றி மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் தொடங்கி வைத்த அவர் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

அதன்பிறகு, பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆட்சியர் கோவிந்தராஜ், 'தமிழகமெங்கும் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் இன்று 142 பள்ளிகளைத் திறந்து வைத்தார். இதில், கரூர் மாவட்டத்தில் மட்டும் பாலச்சமுத்திரம், காவல்காரன்பட்டி, ஆத்தூர், வடசேரி, நாகனூர், குப்பாண்டியூர் ஆகிய 6 இடங்களில் 1 கோடியே, 64 லட்சம் மதிப்பில் 6 உயர்நிலைப் பள்ளிகளைத் திறந்து வைத்திருக்கிறார். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக இங்கு வந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினோம். அரசின் கல்வித்திட்டங்களை சிறப்பாக பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினோம்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!