விஐபி - 2 வுக்கு மும்பையில் பிரம்மாண்ட விழா! | VIP-2 Audio Launch Motion Poster released!

வெளியிடப்பட்ட நேரம்: 16:58 (24/06/2017)

கடைசி தொடர்பு:17:13 (24/06/2017)

விஐபி - 2 வுக்கு மும்பையில் பிரம்மாண்ட விழா!


தனுஷ், அமலாபால் நடிக்கும் ’விஐபி - 2’ வுக்கான மோஷன் போஸ்டர் இன்று ரிலீஸாகியிருக்கிறது. 

விஐபி

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ -வுக்கான  இசை மற்றும் டிரெய்லர் நாளை ரிலீஸாகவிருக்கிறது. டிரெய்லருக்கான முன்னோட்டமாக இன்று மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்திருக்கிறது படக்குழு. 

அமலாபால்,  சமுத்திரகனி, விவேக் என முதல்பாகத்தில் நடித்தவர்களே இந்தப் படத்திலும் மெயின் ரோல்களில் நடித்திருக்கிறார்கள். நெகட்டிவ் ரோலில் பாலிவுட் நடிகை காஜோல் நடித்திருக்கிறார். அனிருத்துக்குப் பதில், இப்படத்தின் இசையை ஷான் ரோல்டன் கவனிக்கிறார்.  

‘வேலையில்லா பட்டதாரி 2’-வின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியை நாளை (ஜூன் 25) மும்பையில் பிரம்மாண்டமாக நடத்தவிருக்கிறார்கள். பாலிவுட், கோலிவுட் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொள்ளவிருப்பதாகவும் தகவல். 

மோஷன் போஸ்டருக்கு:

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க