'சில்லுனு ஒரு சென்னை'.. இரவு முதல் பரவலாக மழை!

rain

சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனத்தால், தமிழகத்தின் பல மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. சென்னையை பொறுத்தவரை கடும் வெயிலுக்கு சற்று விடை கொடுத்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகலில் வானம் மேகமூட்டத்துடன் காட்சி தந்தாலும், சில நாள்களில் கடும் வெயிலும் வாட்டியது.

இந்நிலையில், சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9.30 மணியில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையமும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வேளச்சேரி, நந்தனம், தி.நகர், சைதை, கிண்டி, அடையாறு, சாந்தோம், மயிலாப்பூர், மந்தைவெளி, திருவான்மியூர், அண்ணா சாலை உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. மேலும், விழுப்புரம், நாகை, சேலம் மாவட்டங்களிலும் மழை பெய்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!