வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

vallur

வல்லூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் தேசிய மின் கழகமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளன. இங்குள்ள மூன்று அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் 1500 மெகாவாட் மின்சாரத்தில், தமிழகத்திற்கு மட்டும் 1076 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற 424 மெகாவாட் மின்சாரம் கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி, அங்குள்ள மூன்றாவது அலகு ஜெனரேட்டரில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், 2-வது மற்றும் 3-வது அலகில் பாதிப்பு ஏற்பட்டது. 3-வது அலகு மின்உற்பத்தியும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று 2-வது அலகில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், வல்லூர் அனல் மின்நிலையத்தில் 1000 மெகாவாட் மின்உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!