சரிந்தது தமிழக உற்பத்தித்துறை: ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை!

தமிழகத்தின் உற்பத்தித்துறை வளர்ச்சி கணிசமாகக் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி புதிதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி

தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் மாநிலத்தின் உற்பத்தித்துறை வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போதிய முதலீடுகளும், தொழில் துவக்குவதற்கான வரவேற்பும் இல்லாத காரணத்தால் தமிழக உற்பத்தித்துறை வளர்ச்சி முன்னர் இருந்ததைவிடக் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, இந்த நிதியாண்டின் தமிழக உற்பத்தித்துறை வளர்ச்சி 1.65 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சி நிலை கடந்த நிதியாண்டில் 7.11% வளர்ச்சி அடைந்திருந்தது, தற்போது கீழிறங்கியுள்ளது. தமிழகத்தில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் சூழலே இந்த உற்பத்தித்துறையின் சரிவுக்குக் காரணமென பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால், தமிழக அரசின் தொழில்துறையின் முயற்சிகள் அனைத்தும் எவ்வித பயனையும் அளிக்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடுகள் ஏதும் செய்வதுமில்லை, அதற்கான எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!