குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணமாக, ராமேஸ்வரம் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசிவருகிறது. இதனால், ராமேஸ்வர மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மீனவர்கள்

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக ராமேஸ்வரம், மண்டபம் கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசுகிறது. மணிக்கு 45 முதல் 55 கி.மீ வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த சூறைக்காற்றினால் கரைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.

மேலும், இன்று ஒரு நாள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்ததால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால், மீனவர்களின் பாதுகாப்புக்காக மீன்பிடி அனுமதிச்சீட்டு யாருக்கும் இன்று காலை முதல் வழங்கப்படவில்லை என மண்டபம் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வங்கக்கடலில் உருவாகியிருக்கும் இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணமாகக் கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால், இன்று தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!