விந்தியாவுக்கு தூதுவிடும் தி.மு.க!

விந்தியா

கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க-வின் பிரசார பீரங்கியாகத் தமிழகம் முழுவதும் உலா வந்தவர் விந்தியா. அ.தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளரான விந்தியாவின் அதிரடி பேச்சைக் கேட்டு ரசித்த ஜெயலலிதா சிலமுறை போயஸ் கார்டனுக்கு அழைத்து பாராட்டியிருக்கிறார். பலமுறை போனில் அழைத்து புகழ்ந்திருக்கிறார். ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோது பலமுறை மருத்துவமனைக்குச் சென்றார். ஜெயலலிதா மறைந்தபோது ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்தியதோடு காணாமல் போனார்.

தினகரன் அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் மாறிமாறி விந்தியாவை அழைத்துப் பார்த்தது, மெளனம் காத்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் ஸ்டாலின் தரப்பிலிருந்து தி.மு.க-வில் இணையச்சொல்லி பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது. 'உங்களுக்கு முழு சுதந்திரம் தரப்படும், பிரசாரத்தின்போது முழு பாதுகாப்புக் கொடுக்கப்படும்' என்று வாக்குறுதிகள் தரப்பட்டிருக்கின்றன. தி.மு.க-வில் சேர்ந்த குஷ்புவுக்கு நேர்ந்த கதி தனக்கும் வந்துவிடுமோ என்ற அச்சத்தோடு ஆலோசனை செய்துவருகிறார் விந்தியா.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!