Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் பழனிசாமியை இப்படியெல்லாம் கலாய்க்கிறார்கள் அதிமுக எம்எல்ஏக்கள்!

எடப்பாடி பழனிசாமி

முன்னாள் பிரதமர் நரசிம்மராவுடன் ஒப்பிட்டு முதல்வர் பழனிசாமியை டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் கலாய்த்துள்ளனர்.

இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க.விலிருந்து ஒதுங்கிவிட்டதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து லஞ்சப் புகார் தொடர்பாக டி.டி.வி.தினகரனை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். ஒருமாத சிறைவாசத்துக்குப் பின்னர் வெளியே வந்த தினகரன், கட்சிப் பணியில் ஈடுபடபோவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு முதல்வர் பழனிசாமி அணியினரை அதிரவைத்தது.

இதனிடையே, பெங்களூரு சிறையிலுள்ள சசிகலாவை அண்மையில் தம்பிதுரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பாஜக ஜனாதிபதி வேட்பாளரை அதிமுக அம்மா கட்சி ஆதரிப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனிடையே, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அரக்கோணம் எம்பி அரி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இது குறித்து முதல்வர் பழனிசாமி பதிலளிக்காமல் மெளனம் காத்து வருகிறார். திருத்தணியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அரி எம்பி, "தம்பிதுரை தனது சொந்தக் கருத்துகளைக் கூறி அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். ஒதுங்கி விடுகிறேன் எனக் கூறிய டி.டி.வி.தினகரனை தற்போது யாரோ தூண்டி விடுகிறார்கள். சசிகலா, தினகரனைக் கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதில் அ.தி.மு.க.வில் ஒருமித்த கருத்து நிலவுகிறது" என்று கூறினார்.

வெற்றிவேல்- தங்க தமிழ்ச்செல்வன்

தேனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன், தினகரனைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் எம்பி ஹரி கூறியிருக்கிறார். தினகரனைப் பற்றிபேச அரிக்கு அருகதை இல்லை. பொதுச் செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச் செயலாளராக தினகரனையும் நியமனம் செய்த அஃபிடவிட்டில் அரியும்  கையெழுத்திட்டுள்ளார். இந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாய்திறந்து உண்மை பேச வேண்டும். சசிகலா பொதுச் செயலாளர், தினகரன் துணைப் பொதுச் செயலாளர் என உண்மையைக் கூற வேண்டும். அதுதான் கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்லது. தேவையற்ற சர்ச்சைகள் கட்சியின் வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் எம்எல்ஏ, சசிகலா கட்டுப்பாட்டில்தான் கட்சி உள்ளது. அரி போன்று தவறு செய்பவர்களை எப்படி கிள்ளி எறிவது என்பது தெரியும். அரி உத்தமசீலன் போல் பேசக்கூடாது. பிரதமர் மோடி தம்பிதுரை மூலம் சசிகலாவிடம் ஆதரவு கேட்டது உண்மை. எத்தனை நாள்கள்தான் முதல்வர் அமைதியாக இருப்பார். முதல்வர் பழனிசாமி நரசிம்மராவ் போல் அமைதியாக இருக்கக்கூடாது. நரசிம்மராவ் அமைதியாக இருந்ததால்தான் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்தது. கூவத்தூர் செல்லவில்லை என்றால் அதிமுக ஆட்சி இருந்திருக்காது" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close