ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்! நடிகர் கௌதம் கார்த்திக் சொன்னது இதுதான்

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்குறித்து பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், நேற்று தனது 'இவன் தந்திரன்' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக நடிகர் கார்த்திக்கின் மகனும், சமீபத்தில் வெளியான 'ரங்கூன்' படத்தின் கதாநாயகனுமான கௌதம் திருச்சிக்கு வந்திருந்தார்.

gautam

திருச்சி எல்.ஏ சினிமாஸ் திரையரங்கத்தில் நடந்த 'இவன் தந்திரன்' இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஆர்.கண்ணன், தயாரிப்பாளர் ராம்பிரசாத், இணைத் தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய கௌதம் கார்த்திக்,

gautam

''ரங்கூன்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிலையில், வரும் 30-ம் தேதி வெளியாக உள்ள 'இவன் தந்திரன்' திரைப்படம், இன்ஜினீயரிங் படித்த மாணவர்களின் கதை. என்னுடன் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் நடித்துள்ளார். காதல், காமெடி என எல்லோரும் பார்க்கும்படியாகப் படம் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தற்கொலைசெய்வதைத் தடுக்கும் வகையில் விழிப்புஉணர்வாகவும் படம் வந்துள்ளது. 'ரங்கூன்' படம் போன்று 'இவன் தந்திரன்' படமும் வெற்றியடையும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.

gautam

மேலும், 'எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம், அதனால், அதைப் பற்றி நான் எதுவும் கூற முடியாது' என்றதுடன்,  ரஜினியின் அரசியல் பற்றிய பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கௌதம் கார்த்திக், 'ரஜினி அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அவர் எப்போதும் ஒரு நடிகராக, சூப்பர் ஸ்டாராகவே இருக்க விரும்புகிறேன். இது எனது தனிப்பட்ட கருத்து. நான் அரசியலுக்கு வர விரும்பவில்லை' என்றார்.

'ரஜினி சாரின் அரசியல் பிரவேசம் பற்றிய எனது கருத்தைத் தவறாகச் சித்திரித்து எழுதிவிட்டார்கள். எனக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன். சினிமாவை ரசிக்கிறேன். நேசிக்கிறேன் அவ்வளவுதான்' என்று பதிலளித்துள்ளார் கௌதம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!