வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (27/06/2017)

கடைசி தொடர்பு:15:23 (27/06/2017)

வில்லன் வேடத்தையே விரும்பும் ராணா!

'பாகுபலி' பட வெற்றிக்குப் பிறகு ராணா, வில்லன் வேடத்தில் நடிப்பதையே விரும்புகிறார் என்பதே உண்மை என்கிறார்கள். 'பிரகலாதன் இரண்யன் வதை' என்ற புராணகாலக் கதையைப் பிரமாண்டமாக  உருவாக்கும் பணியில் இறங்கியிருக்கிறார் 'ராணி ருத்ரம்மா' டைரக்‌ஷன் செய்த குணசேகரன்.

ராணா

புராணகால கதைப்படி, பிரகலாதனே ஹீரோ என்றாலும் இரண்யன் கதாபாத்திர அமைப்பு மிகமிகக் கனமானது, கம்பீரமானது என்பதால் அந்தப் படத்துக்கு 'இரண்யா' என்றே டைட்டில் சூட்டியிருக்கிறார் குணசேகரன். 100 கோடி செலவில் உருவாகும் 'இரண்யா' படத்தின் கதையை, ராணாவிடம் குணசேகரன் கூறியிருக்கிறார், கதையைச் சொல்லி முடித்தவுடன், 'நானே இரண்யா கேரக்டரில் நடிக்கிறேன்...' என்று கண்களில் மகிழ்ச்சி பொங்கக் கூறிய ராணா, 'இரண்யா' கேரக்டருக்காக இப்போதே ஹோம்-வொர்க் செய்ய ஆரம்பித்துவிட்டார்.        

நீங்க எப்படி பீல் பண்றீங்க