Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூகுள் நிறுவனத்தின் மீது அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன்!

கூகுள்

கூகுள் தேடுபொறி, தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதாக, ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளது. மேலும், கூகுள் நிறுவனம் 2.42 பில்லியன் யூரோக்கள் அபராதமாகக் கொடுக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

இணையதள ஆன்லைன் ஷாப்பிங் சேவை விதிமுறைகளை கூகுள் நிறுவனம் மீறியதாக, ஐரோப்பிய யூனியனின் நிறுவனங்கள் இடையேயான போட்டியைக் கண்காணிக்கும் அமைப்பில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின்போது கூகுள் நிறுவனம் தனக்கு சாதகமாக உள்ள நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்துவருகிறது. இதனால், கூகுள் நிறுவனம் தனது சந்தை ஆதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, கூகுள் நிறுவனம் 2.42 பில்லியன் யூரோக்கள் அபராதமாகக் கொடுக்க வேண்டும் என ஐரோப்பிய கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது. மேலும், தன் தவறை கூகுள் நிறுவனம் 90 நாள்களுக்குள் திருத்திக்கொள்ளாவிட்டால், அதன் தினசரி வருமானத்தில் 5 சதவிகிதத்தை கூடுதல் அபராதமாகச் செலுத்த நேரிடும் என்று அறிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியன், ஒரு நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட அபராதங்களிலேயே,கூகுள் நிறுவனம் மீது விதிக்கப்பட்ட இந்த அபராதம்தான் மிகப்பெரியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close