கோவையில் தொடர் மழை : வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. தொடர் மழை காரணமாக வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

kovai rain

தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்துவருகிறது. குறிப்பாக, மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில், மழை தீவிரமடைந்துள்ளது. கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தொடர் மழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், வால்பாறையிலும் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளதால், அங்கு அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!