Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஸ்வரூபம் எடுத்தது விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்ற விவகாரம்! சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

குட்கா விற்பனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகப் பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்எல்ஏ-க்கள் வெளிநடப்புசெய்தனர்.

mk stalin

எம்.டி.எம். குட்கா ஆலையின் ஒரே ஒரு பங்குதாரரிடமிருந்து, ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பல கோடிகள், சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு ரூ.60 லட்சம் உட்பட மொத்தம் ரூ.40 கோடி கையூட்டு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இதை, வருமானவரித்துறை விசாரணையின்போது குட்கா ஆலையின் பங்குதாரரான மாதவராவ் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் நேற்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்த விவகாரம், இன்று சட்டப்பேரவையில் எதிரொலித்தது. குட்கா விற்பனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்ற புகார்குறித்து விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க கோரிக்கை வைத்தது. மேலும், இதுதொடர்பாகப் பேச அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு, சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதைக்  கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புசெய்தனர்.

mk stalin

வெளிநடப்புசெய்த தி.மு.க உறுப்பினர்கள், தமிழக அரசை ராஜினாமா செய்யக்கோரி சட்டப்பேரவை வளாகத்தில் முழக்கமிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு குட்கா நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனையிட்டபோது டைரி சிக்கியது. டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. வருமானவரித்துறை கடிதம் அனுப்பி, 10 மாதம் கடந்தும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தடையை மீறி குட்கா விற்க 40 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. லஞ்சப் புகாரில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன. வருமான வரித்துறையிடம் சிக்கிய டைரியில் உள்ளோர் பெயர்களை வெளியிடக் கோரினோம். அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement