பால் பொருள்களில் கலப்படம் - அமைச்சர் புகாருக்கு நெஸ்லே நிறுவனம் மறுப்பு

பால் பொருள்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறிய புகாரை, நெஸ்லே நிறுவனம் மறுத்துள்ளது. 


நெஸ்லே மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் பால் தயாரிப்புகளில், காஸ்ட்டிக் சோடா மற்றும் பிளீச்சிங் பவுடர்  சேர்க்கப்பட்டுள்ளது, ஆய்வு முடிவுகள்மூலம் தெரியவந்துள்ளதாக மாநில பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று தெரிவித்திருந்தார். 
இன்று, நெஸ்லே நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. பால் பொருள்கள் சோதனை தொடர்பான எந்த அறிக்கையும் தங்களுக்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளது. 

ட்விட்டரில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நெஸ்லே நிறுவனம், தங்களது தயாரிப்புகளில் எந்த ரசாயனமும் சேர்ப்பதில்லை எனவும் 100% பாதுகாப்பானது எனவும் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, தனியார் பால் நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டியிருந்த அமைச்சர், அதை இதுவரை உறுதிசெய்யவில்லை. ஆய்வு முடிவுகளும் தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் வந்தன. இதனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  ரசாயனக் கலப்படத்தை உறுதிசெய்யும் நெருக்கடியில் உள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!