போலீஸ் மீது புகார் அளிக்க புதிய ஆணையம்

பொதுமக்களில் யாராவது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், போலீஸாரிடம் புகார் சொல்லலாம். ஆனால், அப்படியான சம்பவங்களில் தற்போது போலீஸ் அதிகாரிகள் அதிக அளவில் சிக்கிவருகின்றனர். அவர்களைப் பற்றி எங்கு சொல்வது? அதற்கும் இப்போது ஒரு வழி இருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, புதுச்சேரியில் போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை அளிக்க புதிய ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இயங்கிவரும் இந்த ஆணையத்தில், பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

புதுச்சேரி அரசின் சார்புச் செயலர், வெர்பினோ ஜெயராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி போலீஸார் மீதான புகார்குறித்து விசாரணை நடத்திட ‘போலீஸ் புகார் ஆணையம்’ புதுச்சேரியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, போலீஸ் காவலர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்கள், அவர்களது செயல்பாடுகள்குறித்து வரும் புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராஜசூர்யா தலைமையில் மூவர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சென்று,  புகார் அளிக்கலாம். அல்லது secypca.py@gov.in என்ற இ-மெயில் முகவரிக்கும் தங்கள் புகார்களை அனுப்பலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!