வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (28/06/2017)

கடைசி தொடர்பு:14:01 (29/06/2017)

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்திக்குக் காவல் நீட்டிப்பு!

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் நீதிமன்றக் காவல்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருமுருகன் காந்தி

சென்னை மெரினாவில் தடையை மீறி நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியின்போது மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, மே 29-ம் தேதி நான்குபேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஐஓசி அலுவலகம்மீது கல்வீசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் திருமுருகன், தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் ஆகியோரைக் காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில் ஜூன் 14-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது சிறையில் தண்டனை பெற்றுவரும் திருமுருகன் காந்தி உள்பட மூவருக்கான நீதிமன்றக் காவல் ஜூலை மாதம் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.