Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`சீக்கு வந்த பிராய்லர் கோழி’, `மங்குனி அமைச்சர்’... ராஜேந்திர பாலாஜி- வைகைச்செல்வன் முற்றும் மோதல்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

vaigai selvan
 

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ’வைகைச்செல்வன் தனியார் பால் முகவர்போல் பேசிவருகிறார். அவர், அ.தி.மு.க. தொண்டரா, முகவரா. வைகைச்செல்வன் சீக்கு வந்த பிராய்லர் கோழி. அழுகிப்போன தக்காளி. குழம்புக்கு ஆகாது’ என்று கடுமையாகச் சாடினார்.

ராஜேந்திர பாலாஜி இவ்வாறு பேசியதற்கு வைகைச்செல்வன் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகைச்செல்வன், ‘விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ராஜேந்திர பாலாஜி உளறிக்கொட்டுகிறார். தனியார் பாலில் கலப்படம் என்று குற்றம்சாட்டும் அவர், இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பாலில் கலப்படம் என்று சொல்லிச் சொல்லியே மக்களைப் பீதியில் ஆழ்த்திவிட்டார். மங்குனி அமைச்சர் என்பதை ராஜேந்திர பாலாஜி மணிக்கொரு முறை நிரூபிக்கிறார்’ என்றார்.
அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் இவ்வாறு மோதிக்கொள்வதால் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close