Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்கள் மூன்று பேருக்கு மு.க.ஸ்டாலின் திடீர் அழைப்பு!

முரசொலி பத்திரிகையின் பவளவிழாவில் பங்கேற்க அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்கள் மூன்று பேருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.


முரசொலி பத்திரிகை ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி 1942-ல் தொடங்கப்பட்டது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் 75 வயதை எட்டும் விதமாக முரசொலி பவளவிழா கொண்டாட்டத்துக்கு திமுகவினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு ஆகியோருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார். இவர்கள் மூவரும் சமீபகாலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். 

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மாட்டிறைச்சி விவகாரத்தில் முதல்வரின் பதில் திருப்தியளிக்கவில்லை என்று வெளிநடப்பு செய்த மூவரும் பின்னர் பேரறிவாளன் பரோல் விவகாரத்துக்காக மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்திருந்தனர். இதனிடையே, கருணாஸ், தனியரசு ஆகியோர் இன்று மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close