Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

22 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கும்பாபிஷேகம்!

அரியலூரில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, கோதண்டராமசாமியின் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், பெருமாள்கோயில் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ ஆலயங்களில் ஒன்றான கோதண்டராமசாமி கோயில் 1,600 ஆண்டுகளுக்கு முன் பல்லவர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் வந்த சோழர்கள் ஆட்சியிலும் தற்போதுள்ள கோயில் பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் 382 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு  கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும், காஞ்சி சங்கரமடத்தின் சார்பில் 1995-ல் நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்குப் பிறகு, இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி 26-ம் தேதி காலை அகல்மர்சன மற்றும் சுதர்சனஹோமம் உள்ளிட்ட முதல் கால பூஜைகளும், மாலை தீர்த்த சங்கரகனம், ஆச்சார்ய அழைப்புடன் இரண்டாம் கால பூஜைகளும் நடைபெற்றன. 27-ம் தேதி (நேற்று) காலை கோபூஜை, திருப்பள்ளி எழுச்சியுடன் 3-ம் கால பூஜைகளும், மாலை விமான கண்திறப்பு, கோ தரிசனத்துடன் 4-ம் கால பூஜைகளும் நடைபெற்றன. இவற்றையடுத்து, இன்று காலை புனித நீர் அடங்கிய குடங்கள் யாகசாலையிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோயிலை சுற்றி வந்து, புனித நீர் விமான கலசங்களில் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ததோடு, அரசு கொறடா எம்.பி சந்திரகாசி எனப் பல அதிமுக-வினர் கலந்துகொண்டனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close