Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிபதி சரமாரி கேள்வி!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு மாதங்களுக்கு மேல் மருத்துவமனையிலிருந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர், மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த காலத்தில் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. மேலும், அவர் சிகிச்சையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு ஏதும் வெளியிடப்படவில்லை.

எனவே, அவருடைய மரணம் தொடர்பாகத் தமிழக மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளிக்க என்ன காரணம். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தீர்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பியதோடு, இதுதொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று மனுதாரருக்கு உத்தரவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close