Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மும்பைக் குண்டுவெடிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளி மரணம்

கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. தொடர்ச்சியாக நடந்த 12 குண்டு வெடிப்புகளில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்மின் கூட்டாளிகள் ஏழு பேர் இந்த வழக்கில் சிக்கினர்.

இதனிடையே, இந்த வழக்கில் கைதான அபுசலீம், முஸ்தஃபா தோஸா, கரீம்முல்லா ஷாயீக், முகமது தாஹிர், அப்துல் காயீம், பெரோஷ் கான், ரியாஸ் சித்திக் ஆகிய ஏழு பேருக்கும், கடந்த 16 -ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Mustafa Dossa

இதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டவர் முஸ்தஃபா. கடந்த சில நாள்களாகவே முஸ்தஃபா உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இன்று அதிகாலை மூன்று மணியளவில் மருத்துவமனையில் முஸ்தஃபா அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகிய குறைபாடுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முஸ்தஃபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close