நீங்கள் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது! திருமண விழாவில் பொங்கிய திவாகரன் | Divakaran's Emotional Speech in Marriage function

வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (28/06/2017)

கடைசி தொடர்பு:14:09 (29/06/2017)

நீங்கள் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது! திருமண விழாவில் பொங்கிய திவாகரன்

"உங்களைப் போன்ற தொண்டர்கள் இருக்கும்வரை நிச்சயம் யாராலும் அதிமுக-வை அழிக்க முடியாது" என்று திருமண விழாவில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆவேசமாகப் பேசினார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள பெம்பண்ணையூரைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாப்பா சுப்பிரமணியனின் மகன் பிரதாப் போத்தன் திருமணத்தில் திவாகரன், தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். முன்பெல்லாம் கோயில்களுக்கு நிதி வழங்குவது, கும்பாபிஷேகங்களைச் செய்துமுடிப்பது என இருந்து வந்த திவாகரன் இப்போது திருமணங்களை நடத்தி வைக்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள் அதிமுக-வினர். கோயில் கும்பாபிஷேங்கள் செய்து ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டுவந்த திவாகரன், அரசியல் பணியிலும் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.

திருமணத்தை நடத்தி வைப்பதற்காக திருவாரூர் வந்த திவாகரனுக்கு பிரமாண்டமாக ஃபிளெக்ஸ்கள் வைத்தும், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தும் வரவேற்பு அளித்தனர் அதிமுகவினர். 'தம்பி வா தலைமை ஏற்க வா' என வைக்கப்பட்டிருந்த ஃபிளெக்ஸ்கள் திவாகரனை அரசியலுக்குள் என்ட்ரீ கொடுப்பதற்குத்தான் அந்த வாசகம் வைக்கப்பட்டிருந்தது என்கின்றனர் உள்ளூர் வாசிகள். திருமணத்தை நடத்தி வைத்த திவாகரன், மணமக்களை வாழ்த்தி பேசும்போது, ''அண்ணன் பாப்பா சுப்பிரமணியன் போன்ற தொண்டர்கள் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. உங்களை போன்ற தொண்டர்கள் இருக்கும்வரை நிச்சயம் யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது'' என பன்ச் வைத்து பேசிமுடித்தார்.

எப்போதுமே அரசியலில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பதவிகள், பொறுப்புகளை வாங்கிக்கொடுத்து  அழகு பார்த்து அரசியலில் முன்னிறுத்துவார் திவாகரன். ஆனால், இனிமேல் யாரையும் அரசியலில் முன்னிறுத்தப் போவதில்லையாம். அவரே அரசியலில் குதித்துவிடலாம் என்பதற்காகத் திருமணங்களை நடத்தி வருகிறாராம் திவாகரன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க