'விளம்பரம் தேடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி': மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவியது. இதையடுத்து, தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள குளங்களைத் தூர் வாரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் குளம் தூர் வாரும் பணியை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 

Stalin


 அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், 'பால் கலப்படத்தை நிரூபிக்கவில்லை என்றால் ராஜினாமா செய்வேன், தற்கொலை செய்வேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். ஆனால், தற்போது அவர் ராஜினாமா செய்வாரா? அல்லது தற்கொலை செய்வாரா என்று மக்கள் எதிர்பார்த்துவருகின்றனர். 


குளம் தூர் வாரும் பணியை தமிழக அரசுதான் தொடங்கியதாக முதலமைச்சர் விளம்பரம் தேடுகிறார். குளங்களில் தூர் வாரும் பணியைத் தொடங்கியது தி.மு.க.தான். ஏற்கெனவே அடித்துக்கொண்டிருக்கிற கொள்ளையை, தொடர்ந்து அடிக்க முடியும் என்ற நிலையில் அந்த முயற்சியில்தான் அவர்கள் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார்கள். மக்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ, கல்வியைப் பற்றியோ அவர்கள் கவலைப்படவில்லை. குட்கா விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்றும் கேள்வி எழுப்பப்படும், வழக்கும் தொடரப்படும்' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!