வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (29/06/2017)

கடைசி தொடர்பு:16:06 (29/06/2017)

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரனைச் சந்திப்பார் : புகழேந்தி ஆரூடம்..!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் டி.டி.வி.தினகரனைச் சந்திப்பார் என்று தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார். 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க அணி இரண்டாகப் பிரிந்தது. அதனையடுத்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் சிறைக்குச் செல்லும் சூழல் உருவானது. அந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணி உருவானது. தற்போது, அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்துள்ளது. எடப்பாடியும் பன்னீர்செல்வமும், இரு அணிகளும் இணையும் என்று தெரிவித்து வந்தாலும், அவை இணைவதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும், தினகரனும் இணைவது குறித்து கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி புதுக் கருத்தைத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பிறகு, டி.டி.வி.தினகரன் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணத்தை மேற்கொள்வார். விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரனைச் சந்தித்துப் பேசுவார். இருவருக்கிடையேயான கருத்து வேறுபாடு விலகும்' என்று தெரிவித்துள்ளார்.