நீட் சட்டம், தமிழக அரசுக்கு எதிராக பிரின்ஸ் கஜேந்திரபாபு பரபரப்பு நோட்டீஸ்

நீட் தேர்வு

நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில் பெரும்பான்மையானோர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், ப்ளஸ் டூ வகுப்பில் தமிழகப் பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 85 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  அறிவித்தார். இதற்குக் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழக சுகாதாரத் துறைக்கு எதிராக ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், நீட் தொடர்பான தமிழக அரசின் சட்டத்தில் ஜனாதிபதி கையெழுத்துப் போடும் வரை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழக மாணவர்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் சுகாதாரத்துறைக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!