Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பால் கலப்படம் தடுக்க சகாயம் தலைமையில் அதிரடிப்படை! குபீர் கோரிக்கை

 ராஜேந்திர பாலாஜி

னியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட்டுகளில் ரசாயனக் கலப்பு செய்வதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுமத்திய குற்றச்சாட்டு நாளுக்குநாள் புதுபரிணாமம் பெற்று, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், "அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவிநீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்  தலைமையில் அதிரடிப்படைக் குழு அமைக்க வேண்டும்" என்று தனியார் பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது.

அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, " 'தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன' என்கிற பால்வளத்துறை அமைச்சரின் குற்றச்சாட்டு குறித்து பதில் தெரிவிக்க வேண்டிய பெரும்பாலான தனியார் பால் நிறுவனங்கள் வாய்மூடி அமைதி காக்கும்போது, பால் முகவர்கள் சங்கம் மட்டும் இப்பிரச்னையில் மூக்கை நுழைத்து அமைச்சரோடு மல்லுக்கட்ட வேண்டிய அவசியம் என்ன? என்கிற கேள்வியும், ஒருவேளை அமைச்சர் சொல்வதுபோல, தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து பொன்னுசாமி பணம் பெற்றிருப்பாரோ? என்கிற ஐயமும் பொதுமக்களுக்கு எழலாம். இதுபோன்ற ஐயத்தை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது செய்தியாளர்கள் பலர் என்னிடம் எழுப்பினர். தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்படம் செய்கின்றன, தனியார் பால் நிறுவனங்களின் பாலைக் குடித்தால் புற்றுநோய் வரும் என்ற அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சை, நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருவதற்குக் காரணம், பால் முகவர்களுக்கு அதிக வருவாய் அளிக்கும் தனியார் பால் நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலோ அல்லது அமைச்சரின் குற்றச்சாட்டுகளை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும் என்ற காரணத்தினாலோ அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

ஏனெனில், தற்போது தாய்ப்பாலைவிட அதிகமாக பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுவது பாக்கெட் பால்தான். குழந்தைகள் சு.ஆ.பொன்னுசாமிமுதல் முதியவர்கள், நோயாளிகள் என அனைவருக்கும் அத்தியாவசியத் தேவையாக விளங்குவது பால் என்றால் அது மிகையில்லை. தற்போது 90% பால் பாக்கெட்டில்தான் கிடைக்கிறது. இந்த பாக்கெட் பாலை பொதுமக்களுக்கு கொண்டுபோய்ச் சேர்ப்பது பால் முகவர்கள்தான் என்பதால், அவர்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறோம். எனினும், பொதுமக்களை பீதியடையச் செய்யும்வகையிலான அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சினால் பீதியடைந்துள்ள பொதுமக்கள், பால் முகவர்களிடம்தான் தங்களின் சந்தேகங்களையும், அச்சத்தையும் தெரிவித்து வருகின்றனர். எனவே, பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம், இப்பிரச்னையில் தலையிட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தையும், பீதியையும் போக்குகின்ற பணியினை மட்டுமே செய்து வருகிறது. இதற்காக எந்தவொரு தனியார் பால் நிறுவனத்திடம் இருந்தும் ஒரு பைசாகூட ஆதாயம் பெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் குற்றச்சாட்டை மறுக்காமல், எங்கே மறுப்பு தெரிவித்தால் தங்களின் வணிகம் பாதிக்கப்படுமோ என்று சுயநலத்துடன் தங்களின் பால் மற்றும் பால் பொருள்களின் தரம் குறித்தும் இதுவரை விளக்கம் அளிக்காமல் இருக்கும் தனியார் பால் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், தமிழகத்தில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருள்களின் தரம் குறித்து 15 நாள்கள் முதல் 30 நாள்களுக்குள் விரிவான அறிக்கை கேட்டு, எங்களது சங்கத்தின் சார்பில் ஓரிரு நாளில் கடிதம் அனுப்புவது என்றும், அவ்வாறு பெறப்படும் அறிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக மக்கள் மன்றத்தில் சமர்ப்பிப்பது எனவும், அறிக்கை அளிக்காத பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருள்களின் விற்பனையை புறக்கணிப்பது எனவும் முடிவு செய்துள்ளோம்" என்றார்.

"அதுமட்டுமன்றி, கலப்படப் பால் நிறுவனங்களைக் கண்டறிந்து தமிழக பால்வளத்துறை, சுகாதாரத்துறை, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகள், கலப்படம் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்காமல், பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறேன் என்ற பெயரில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில், கருத்துகளைத் தெரிவித்து, தேவையற்ற அச்சத்தை அமைச்சர் உருவாக்குவதை இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.

'ஆய்வில் கலப்படம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அந்நிறுவனங்களைத் தடைசெய்ய முடியாது' என்கிறார். அதுமட்டுமன்றி. மத்திய அரசின் உணவு தரக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மீது பழியை போட்டு தப்பித்துக் கொள்ளப் பார்ப்பதோடு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என பொறுப்பை தட்டிக்கழிக்க முயலும் அமைச்சர், மக்கள் நலன் மீது அக்கறையில்லாதவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் பாலில் கலப்படம் நடப்பதை தடுக்கவும், கலப்பட பால் நிறுவனங்களைக் கண்டறிந்து இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும் அதிரடிப்படை குழு ஒன்றை அமைக்க வேண்டும்"என்று பொன்னுசாமி வலியுறுத்தி உள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement