சரணடைய ஜவாஹிருல்லாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட ஐந்து பேர் சரணடைய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

jawahirullah
 

வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகப் பணம்பெற்றதாக, கடந்த 2000-ம் ஆண்டு, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி, சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்லமுகமது களஞ்சியம் உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு,  கடந்த 2011-ம் ஆண்டு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு ஓரா‌ண்டு ‌சிறைத் தண்டனையும் மற்ற மூன்று பேருக்கு இரண்டு ஆண்டுகள் ‌சிறைத் தண்டனையும், ஐந்து பேருக்கும் ரூ.1,40,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. 

2011-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை, சென்னை மாவட்ட 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்தது. எனவே, ஜவாஹிருல்லாவின் சிறைத் தண்டனை உறுதியானது. ஆனால், ஜவாஹிருல்லா உள்ளிட்ட ஐந்து பேரும் ரம்ஜான் நோன்பைக் காரணம் காட்டி சரணடைய ஒரு வாரக்கால அவகாசம் கேட்டனர். நீதிமன்றமும் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், ஒரு வாரக்கால அவகாசம் முடிந்துவிட்டதால், ஜவாஹிருல்லா உள்ளிட்ட ஐந்து பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் அதன் பின்னர், மனுத்தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து ஐவாஹிருல்லா உள்பட 5 பேரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று  சரணடைந்தார். இதற்கிடையே அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஐவாஹிருல்லா உட்பட 5 பேருக்கும் ஜாமீன் வழங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!