பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு!

ANNA UNIVERSITY

பொறியியல் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை, அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.

இந்த ஆண்டு, பொறியியல் படிப்புக்காக 1.41 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான கலந்தாய்வு, ஜூலை மூன்றாவது வாரத்தில் நடைபெறயிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, 2017-18-ம் கல்வியாண்டுக்கான பொறியியல் கல்விக்கட்டணத்தை உயர்த்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவுசெய்தது. இதையடுத்து, கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, இன்று பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

அதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கான கல்விக்கட்டணம் 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கான கல்விக்கட்டணம், 70 ஆயிரத்திலிருந்து 85 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டுக்குப் பிறகு, பொறியியல் கல்விக்கட்டணங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!