Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”ஜோதிமணி கட்சியில் இருக்கிறாரா என்றே தெரியவில்லை!” - கடுப்பில் கரூர் மாவட்ட காங்கிரஸ்

                         கரூர் காங்கிரஸ்

காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசலும் சட்டைக் கிழியலும் சகஜம்தான் என்றாலும், கரூர் மாவட்டக் காங்கிரஸ்  கோஷ்டி பூசலானது ஒருபடி மேலே போய் கரகாட்டமே ஆடிக் கொண்டிருக்கிறது. 20 நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரால், கரூர் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டவர் சின்னச்சாமி. 

காங்கிரஸ் கட்சியை வளர்க்க புது ரத்தம் பாய்ச்சும் பொருட்டு, அநேக மாவட்டங்களில் புதுமுகங்களுக்கு மாவட்டத் தலைவர் பதவியை வாரி வழங்கி வருகிறார் திருநாவுக்கரசர். அந்த வகையில்தான், கரூர் மாவட்டத் தலைவராக மாநில காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் ஜோதிமணியின் ஆதரவாளரான சின்னச்சாமியை நியமித்திருக்கிறார். ஆனால்,  கரூர் மாவட்டக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரான பேங்க் சுப்பிரமணியன், புதியத் தலைவர் சின்னச்சாமியை கட்சி அலுவலகத்துக்குள்ளேயே அனுமதிப்பதில்லை. மேலும், தனது தலைமையிலேயே  ஒவ்வொரு நகரம், ஒன்றியமாக உறுப்பினர் சேர்ப்பு மற்றும் உறுப்பினர் அட்டை கொடுக்கும் கூட்டத்தையும் நடத்தி அதிர வைத்துவருகிறார். அதோடு, ஒவ்வொரு கூட்டத்திலும், ''யார்னே தெரியாத, கட்சிக்கு எந்தத் தியாகத்தையும் பண்ணாத சின்னச்சாமியைப் பதவியை விட்டுத் தூக்கணும்'' என்று தீர்மானமும் போட்டு வருகிறார். 


 கரூர் காங்கிரஸ்

இந்நிலையில், இந்தத் தாக்குதலின் அடுத்தகட்டமாக இன்னொரு கலாட்டாவையும் அரங்கேற்றியிருக்கிறார்கள். இதுகுறித்துப் பேசும் சின்னச்சாமித் தரப்பினர், "எங்கள் தலைவர் சின்னச்சாமி ஒரு ஸ்வீட் கடையில் அமர்ந்து மிக்சர் சாப்பிடும் போட்டோவை வாட்ஸ் அப்,பேஸ்புக் குரூப்புகளில் போட்டு, 'நாட்டாமை படத்தில் வரும் மிக்சர் கேரக்டர் நம்ம சின்னச்சாமி' என்று விஷமப்  பிரசாரம் பண்ணி வருகிறார்கள் முன்னாள் மாவட்டத் தலைவரின் ஆட்கள். இதை நாங்க சும்மா விடப் போவதில்லை" என்று நறநறக்கிறார்கள். 

காங்கிரஸ் கட்சியில் கடந்த 15 வருடங்களாகக் கரூர் மாவட்டத் தலைவராக இருந்த பேங்க் சுப்பிரமணியன், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கரூர் தொகுதியில், தி.மு.க கூட்டணி சார்பாக நின்று அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் நானூற்று சில்லறை ஓட்டுகளில் தோற்றவர். 

நேற்று கரூரிலும் இன்று அரவக்குறிச்சியிலும் கூட்டம் நடத்திய பேங்க் சுப்பிரமணியன், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கியதோடு, சின்னச்சாமிக்கு எதிராகத் தீர்மானமும் போட்டிருக்கிறார். இரண்டு கூட்டங்களிலும் பேசிய பேங்க் சுப்பிரமணியன், "கரூர் மாவட்டப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டது தொடர்பாக நிர்வாகிகள், தொண்டர்களுக்கிடையே வருத்தம் உள்ளது. யாருனே தெரியாத சின்னச்சாமியை மாவட்டத் தலைவராகப் போட்டிருக்கிறார்கள். இதுபற்றி, அகில இந்திய தலைமை, மாநில தலைமை என்று இரண்டிலும் புகார் கொடுத்துள்ளோம். புதிய தலைவர் நியமனத்தை விட்டுவிட்டு, நாம் உறுப்பினர் சேர்க்கையை விரைவுப்படுத்த வேண்டும். புதிய மாவட்டத் தலைவர் நியமனத்தில், கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணியின் தலையீடு இருப்பதாகச் சொல்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக ஜோதிமணி, கரூரில் கட்சிப் பணி எதையும் செய்யவில்லை. அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்துக்குத் தலைவர்கள் வந்தபோதுகூட, அவர் வரவில்லை. கட்சியில் அவர் இருக்கிறாரா என்பதே தெரியவில்லை. இந்நிலையில், அவர் ஏதேதோ செய்து இன்னொரு அட்ரஸ் தெரியாத நபரை மாவட்டத் தலைவராக்கி இருக்கிறார். கொடுமை. நல்ல செய்தி வரும். நாமே தலைவராகத் தொடர்வோம்" என்று அதிரடியாகப் பேசினார்.


 கரூர் காங்கிரஸ்

கூட்டம் முடிந்ததும் பேங்க் சுப்பிரமணியனிடம் பேசினோம்... "ஆமாம். நாங்க இத்தனை வருஷமா கட்சியை இங்கே செல்வாக்காக இரவு பகல் பார்க்காம உழைத்து வளர்த்து வைத்தா, யாருனே தெரியாத நபர் கட்சித் தலைவராகி நாட்டாமை பண்ண பார்த்தா.... அது எப்படி சார்? 15 வருடங்களாக எத்தனையோ மக்கள் பிரச்னைகளில் போராட்டங்கள் நடத்தியிருப்போம். ஒன்றில்கூட ஜோதிமணி கலந்து கொண்டதில்லை; சின்னச்சாமியும் கலந்துகொண்டதில்லை. அப்படி ஒரு நபர் இருப்பதே இப்போதுதான் எனக்குத் தெரியுது. என்னை விடுங்க... சாதாரணத் தொண்டர்களுக்கே சின்னச்சாமி யாருனே தெரியலை. இப்படிப்பட்ட நபர், எப்படி கரூர்ல கட்சியை வளர்க்க முடியும்?அதனால்தான் அவருக்குப் பதவி கொடுத்ததை எதிர்த்து தீர்மானம் போட்டிருக்கிறோம். மாவட்டத் தலைவராகி 20 நாளாவுது. இதுவரைக்கும் காமராஜர் சிலைக்கு மாலை போடலை அவர். அவரைப் பற்றித் தலைமைக்குப் புகார் அனுப்பி இருக்கிறோம். தகுதியில்லாத, யாருனே தெரியாத ஒருவரை இப்படி மாவட்டத் தலைவராக நியமித்தது குறித்து, என் அபிமானிகள் மீம்ஸ் போட்டது உண்மைதான். 'நாட்டாமை படத்துல வர்ற மிக்சர் கேரக்டர்போல் ஒரு ஆளைப் பதவியில் போடலாமா?'ன்னு, அவங்க கேட்கிறதுல என்னசார் தப்பிருக்கு? அது உண்மைதானே? இவர் சொல்வதை மத்தவங்க கேட்கணும், மதிக்கணுமில்லே....? ஆனால், அதுக்குத் தகுதி இல்லாத ஆள் சின்னச்சாமி. அதனால், அவரை மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து தூக்க, எல்லா வகையிலும் முயல்வோம்" என்றார் அதிரடியாக!


 பேங்க் சுப்பிரமணியன்

கரூர் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய மாவட்டத் தலைவரான சின்னச்சாமியிடம் இதுகுறித்துப் பேசினோம். "உண்மையில் பேங்க் சுப்பிரமணியனைத்தான் எனக்கு யாருனே தெரியாது. காரில் கண்ணாடியை ஏத்திவிட்டுக்கொண்டுப் போகும் அவருக்குக் கீழ்மட்டத் சின்னச்சாமிதொண்டர்களை எப்படித் தெரியும்? பெட்டிக்காகக் கட்சியை அடகு வைப்பவர் அவர்.  உறுப்பினர்களைச் சேர்த்து கட்சியை வளர்க்க, ஒவ்வோர் ஒன்றியமாகப் போய் சின்னச்சாமி எப்படி உழைச்சான்னு கேட்டுப் பார்க்கட்டும். நான் யார், நான் உழைத்த உழைப்பு என்னன்னு புரியும். தமிழகத்திலேயே காங்கிரஸ் கட்சி ரொம்பத் தேய்ந்த நிலைக்குப் போன மாவட்டம் கரூர்தான். காரணம், அவர் தொண்டர்கள் யாரையும் மதிக்கறதில்லை. அவர் பின்னே நாலே நாலு பேர்தான் இருக்காங்க. பார் ஓனர், அநியாயத்துக்குக் காசைப் புடுங்கும் பள்ளிக்கூட ஓனர், வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஃபைனான்ஸ் கம்பெனி வச்சுருக்குறவங்க... இப்படிப் பணமே குறிக்கோள்னு வாழ்றவங்கதான் அவரோட இருக்காங்க. நான் சாதாரணக் கடையில் போய் மிக்சர் சாப்பிட்டப் போட்டோவைப் போட்டு, 'நாட்டாமை பட மிக்சர் கேரக்டர்'னு விஷமப் பிரசாரம் பண்றாங்க. அதுக்கும், 'நான் இன்னமும் சாதாரணக் கடையில் மிக்சர் சாப்பிட்டு, தொண்டனோடு தொண்டனாக செயல்படும் தலைவராகத்தான் இருக்க விரும்புகிறேன். உங்களைப் போல, விலையுயர்ந்த ஹோட்டல்ல சாப்பிடமாட்டேன்'னு நாகரிகமாத்தான் பதில் சொன்னேன். காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு என்னை அழைக்காமல் கூட்டம் போட்டதோடு, ஒன்றியம், நகரம் என்று ஒவ்வொரு பகுதியாகப் போய் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தி வருகிறார். இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல். இதுபற்றி தலைமைக்குப் புகார் கொடுத்திருக்கிறோம். கரூர் டவுனுக்குள் நாங்க மாவட்ட ஆபீஸ் போடப் பார்க்கும் இடத்தை எல்லாம், குறுக்கேப் புகுந்து கலைத்து விடுகிறது பேங்க் சுப்பிரமணியன் தரப்பு. இடத்தைத் தடுத்து, என் பதவியைப் பிடுங்கிடலாம்னு காய் நகர்த்துறார். அது ஒருபோதும் நடக்காது" என்றார் ஆவேசமாக!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close