Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.

நிலக்கரி அடிப்படையிலான இந்த தூத்துக்குடி அனல் மின் நிலையம் கடந்த 1979-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பழமையான அனல் மின் நிலையங்களில் தூத்துக்குடி அனல் மின் நிலையமும் ஒன்றாகும். இதில் மொத்தம் 5 யூனிட்டுகள் உள்ளது. ஒவ்வொரு யூனிட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. 5 யூனிட்டுகள் மூலம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இதிலுள்ள முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவையும் தாண்டி சுமார் 30 ஆண்டுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

இதனால், அவ்வப்போது மின் உற்பத்தி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடைப்படுகிறது. இதில் சில சமயம் தண்ணீர் பற்றாக்குறையாலும்
மின் உற்பத்தி தடைப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று காலை 5வது யூனிட்டில் திடீரென கொதிகலன் பழுதானது. இதனால், உடனடியாக மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது. பழுதை சரி செய்யும் பணியில் அனல் மின் நிலைய பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே வருடாந்திர 10 நாள்கள் பராமரிப்பு பணிக்காக 4வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 5வது யூனிட்டிலும் ஏற்பட்டுள்ள பழுதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close