Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் ஜனாதிபதி தேர்தல்: தேர்தல் பார்வையாளராக ராஜேஷ் லக்கானி நியமனம்!

தமிழகத்தில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் குறித்து தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.

ராஜேஷ் லக்கானி

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருவதாகத் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தேர்தல் குறித்து ராஜேஷ் லக்கானி கூறுகையில், ’’தமிழக தலைமைச் செயலகத்திலும், சட்டப்பேரவை செயலாளர் அறை அருகே உள்ள கூட்டரங்கிலும் ஜூலை 17-ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவில் தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பர். சட்டமன்ற உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பச்சை நிற வாக்குச்சீட்டிலும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் சிறப்புப் பேனாவால் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்பது விதிமுறை’’ என்றார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close