Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடைபாதையில் வசித்துவரும் `விருச்சககாந்த்' பாபுவுக்கு அடைக்கலம் கொடுத்த நடிகர்..!

`காதல்' படத்தில் `நடிச்சா ஹீரோதான் சார்...' என்ற ஒரே வசனத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் `விருச்சககாந்த்' பாபு. இவர் பட வாய்ப்புகள் ஏதுமின்றி சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சூளை அங்காளம்மன் கோயில் அருகில் உள்ள நடைபாதையில் வசித்துவந்தார். பாபுவின் அப்பா அம்மா, கூடப்பிறந்தவர்கள் ஐந்து பேர் என சூளையில்தான் அனைவரும் வசித்திருக்கிறார்கள். தாய் தந்தை மறைவுக்குப் பிறகு, அண்ணன் தம்பி, தங்கை எனக் குடும்பத்தில் சிலர் மனநலம் சரியில்லாமல் போயிருக்கிறார்கள். அக்காவுடன் சிலகாலம் இருந்தவர் இப்போது தனியாக ரோட்டோரங்களிலும் ஆட்டோ ஸ்டாண்டிலும் படுத்துறங்கி வந்தார்.

விகடன் இணையதளத்திலும், நாளிதழ்களிலும் இவரின் நிலை பற்றிய செய்திகள் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சி அடையச்செய்தன. இதைக் கேள்விப்பட்ட, நடிகர் சாய் தீனாவும் இயக்குநர் மோகனும் பாபுவை மீட்டு வந்துள்ளனர். தற்போது பாபு  நடிகர் சாய் தீனாவின் இல்லத்தில்தான் இருக்கிறார். `மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாபுவுக்கு, இப்போது நல்ல நண்பர்களும், நல்ல தூக்கமுமே தேவை. மறுபடியும் அவர் திரைப்படங்களில் நடிக்க இயக்குநர்கள் வாய்ப்பு தர வேண்டும். பாபு ஒரு பிரபலமாக திரைத்துறையில் வலம் வர வேண்டும்' என்றும் சொல்கிறார் சாய் தீனா. இது சம்பந்தமாக முகநூலில் வீடியோ ஒன்றும் பதிவேற்றியுள்ளார் இயக்குநர் மோகன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close