Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி - ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி! #SLvsZIM

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இலங்கையில் உள்ள கல்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 

முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் 86 ரன்கள் அடித்தார். பின்னர் 317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி, அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஜிம்பாப்வே - இலங்கை 1st ODI

ஜிம்பாப்வே அணி 47.4 ஓவர்களில் 322 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வேயின் இரண்டாவது அதிகபட்ச சேசிங் இது. அந்த அணியின் சாலமன் மிர் சதம் அடித்தார். சிகந்தர் ரசா, சீன் வில்லியம்ஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர். சமீபகாலமாக ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்துக்கொண்டிருந்த ஜிம்பாப்வே அணிக்கு இந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்கியிருப்பது உத்வேகத்தைக் கொடுத்திருக்கும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement