கதிராமங்கலத்தில் பதற்றம் அதிகரிப்பு .. காவல்துறை தடியடி!

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வன்முறை வெடித்துள்ளது.

 

kathiramangalam
 

கதிராமங்கலத்தில் விளைநிலங்களுக்கு இடையே ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய்க் கிணறுகளின் சில பைப் லைன்களில் தீடீரென கசிவு ஏற்பட்டது. கச்சா எண்ணெய் கொப்பளித்து வெளியே வந்துகொண்டிருப்பதால் விளைநிலங்கள் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இன்று காலை முதல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை அப்பகுதியைப் பார்வையிட வந்த அதிகாரிகளை அனுமதிக்க பொதுமக்கள் மறுத்துவிட்டனர். அங்கு வந்த போலீஸாருக்கும் போராட்டம் செய்யும் மக்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மர்ம நபர்கள், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்குத் தீ வைத்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நாங்கள் தீ வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். 

kathiramangalam

Do you like the story?

Please Appreciate the Author by clapping!