Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக டிஜிபி-யாக டி.கே. ராஜேந்திரன் நியமனம்!

தமிழக டிஜிபி-யாக டி.கே.ராஜேந்திரன் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஜிபி ராஜேந்திரன்

தமிழகக் காவல்துறையின் தலைமை இயக்குநராக இருந்த அசோக்குமார், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயமாகப் பதவி விலக்கப்பட்டார். அதன்பின்னர், அவருக்குப் பதிலாக புதிய தலைமை இயக்குநர் நியமிக்கப்படவில்லை. கடந்த 10 மாதங்களாக காவல்துறை தலைமை இயக்குநர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

அதிகாரிகளின் பணி அனுபவத்தில் மிகவும் இளையவர் என்று கூறப்படும் டி.கே.ராஜேந்திரன், உளவுப் பிரிவின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டு, சட்டம் - ஒழுங்கு பிரிவு தலைமை இயக்குநர் பதவி, அவருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இன்றுடன் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், அவருக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி டிஜிபி-யாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன் 1957-ம் ஆண்டு திருவண்ணாமலையில் பிறந்தவர். ஊராட்சிப் பள்ளியில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தவர், வேலூரில் இளநிலைப் பட்டப்படிப்பும், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பும் முடித்துள்ளார். 1984-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த டி.கே.ராஜேந்திரன், இன்று டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close