மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் சுற்றுலாப் பயணம்! மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை சுற்றுலாப் பயணம் அழைத்துச் சென்ற நிகழ்ச்சி, திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆரம்ப கால பயிற்சி மையக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் ஒரு நாள் சுற்றுலாப் பயணத்தை திருச்சி மாவட்ட கலெக்டர்  ராசாமணி, கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

திருச்சி சத்திரம் பேருந்துநிலையத்தில் உள்ளது, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையமாக, 'விடிவெள்ளி சிறப்புப் பள்ளி', செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையமாக, 'புத்தூர் ஹோலிகிராஸ் சர்வீஸ் சொசைட்டி', மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையமாக 'ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் திருச்சிராப்பள்ளி.'

பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையமாக, 'ஜோசப் கண் மருத்துவமனை', ஆட்டிசம் குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையமாக, 'தில்லை நகர் டால்பின் தொண்டு நிறுவனம்', பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையமாக, 'ஹோலிகிராஸ் பிளாசம் சிறப்புப் பள்ளி' போன்ற பயிற்சி மையங்கள் செயல்பட்டுவருகின்றன.

இந்தப் பயிற்சி மையங்களில் உள்ள 75 குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் 75 பேர் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் என மொத்தம் 165 பேர் கொண்ட குழு, தஞ்சாவூர் பெரியகோயில் மற்றும் சரஸ்வதி மஹால் ஆகிய இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலாப் பயணமாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!