தொகுதியைச் சுத்தம் செய்ய வந்த கிரண்பேடியைத் திருப்பி அனுப்பிய எம்.எல்.ஏ!

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஆய்வுப் பணியை மேற்கொள்வதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் களத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார் ஆளுநர்.

கிரண்பேடி

புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றுக்கொண்டது முதல் அவருக்கும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்குமிடையே அதிகார மோதல் நடந்துவருகிறது. மோதல் முற்றிய நிலையில் ஒரு நாள் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்களின் அனுமதி இல்லாமல் அரசு அதிகாரிகள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்திக்கக் கூடாது என்ற புதிய உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்நிலையில், தற்போது புதுச்சேரியில் உள்ள பகுதியில் ஆய்வு மேற்கொள்ளச் சென்ற துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு அப்பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பாலன் தனது கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத கிரண்பேடி உடனடியாக ஆய்வு சோதனையைக் கைவிட்டு அந்த இடத்திலிருந்து புறப்பட்டார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, ‘எதுவானாலும் புதுச்சேரி மாநிலத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை நான் தொடர்ச்சியாக மேற்கொள்வேன்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!