Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'திரையுலகத்துக்கே குரல் கொடுக்காதவர் அரசியலுக்கு வந்தால் மட்டும் குரல் கொடுப்பாரா?' - ரஜினியை விளாசும் டி.ஆர்

'திரைப்படங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு ரஜினி குரல் கொடுக்காதது ஏன்?' என்று டி.ஆர் கேள்வி எழுப்பியுள்ளார். 


ஜிஎஸ்டி வரி, இன்று முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சில பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டிருந்தாலும் பல  பொருள்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தப் புதிய வரிக் கொள்கையில் திரைப்படங்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. 
இதனால், திரையரங்க டிக்கெட் கட்டணங்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் டி.ராஜேந்தர், 'ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் ரஜினி ஏன் மௌனமாக இருக்கிறார்' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

'ஜிஎஸ்டி வரி குறித்து ரஜினி ஏன் குரல்கொடுக்கவில்லை. உங்களை வாழவைத்த திரையுலகத்துக்கு ஏன் குரல்கொடுக்கவில்லை? திரையுலகத்துக்கே குரல் கொடுக்காத ரஜினி, நாளை அரசியலுக்கு வந்தால் மட்டும் குரல்கொடுப்பாரா?' என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஜிஎஸ்டி வரியால் திரையரங்குக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதில் முரண்பாடு உள்ளதாகவும் டி.ஆர் கூறினார்.  ஜிஎஸ்டி வரியை எதிர்த்து தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் திரையரங்குகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close