Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காணொலி மூலம் ஆஜரானார் சசிகலா! மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவு

அந்நியச் செலாவணி வழக்கில் சசிகலா இரண்டாவது முறையாகக் காணொலிக் காட்சி மூலம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1996-97 காலகட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து ஜெ.ஜெ. டிவி-க்குத் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்கிய வழக்கில் ஏற்கெனவே சசிகலா, திவாகரன், பாஸ்கரன் ஆகியோர்மீது அந்நியச் செலாவணி வழக்கு இருந்துவருகிறது. அமலாக்கத் துறையினர், இவர்கள்மீது ஐந்து வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் கடந்த 21-ம் தேதி காணொலி மூலம் சசிகலா பதிலளித்தார்.

அப்போது அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று 2-வது முறையாக மீண்டும் சசிகலா காணொலி மூலம் ஆஜரானார். வெளிநாடுகளிலிருந்து தொலைக்காட்சி உபகரணங்கள் வாங்கிய மற்றொரு வழக்கில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜாகிர் உசைன் முன்னிலையில் சசிகலா மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close