Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிராமத்தில் டெபிட்கார்டு, கிரெடிட்கார்டு எதிர்பார்க்க முடியுமா? ஜிஎஸ்டியால் கொதிக்கும் சிறு வியாபாரிகள்

ஜிஎஸ்டி என்பது பொருள்களுக்கான சேவை வரி. இந்த வரி முறையைக் கொண்டுவர 17 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஜிஎஸ்டி எங்கள் ஆட்சியில் வடிவமைக்கப்பட்டது என்கிறது. 'பிஜேபி கொண்டு வந்த ஜிஎஸ்டி உண்மையானதல்ல. இந்திய பொருளாதாரத்தை உயர்த்தாது' என்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். ஆனால், பொருளாதார வல்லுநர்கள், 'ஜிஎஸ்டி நல்ல முயற்சி. நாட்டின் பொருளாதாரம் உயரும்' என்று சொல்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில்  அமலுக்கு வந்திருக்கும் ஜிஎஸ்டி-யால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை அறிவதற்காக சிவகங்கை காந்தி வீதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் சண்முகத்திடம் பேசினோம். ''ஜிஎஸ்டி வரி சர்பத்தையும் விட்டுவைக்கவில்லை. பழங்களுக்கு வரியில்லை. ஆனால், அதைப் பிழிஞ்சு கொடுத்தால் வரி. என்னங்க கொடுமையா இருக்க. சைவத்துக்கு வரியில்லை. அசைவத்துக்கு வரி உண்டு. நெய்க்கு வரியில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால் ஏழைகள் சாப்பிடும் பொருள்களுக்குதான் ஜிஎஸ்டி வரி போடப்பட்டிருக்கிறது. சிகரெட் எல்லாம் இரண்டு நாள்களுக்கு முன்பே சப்ளை செய்வதை நிறுத்திவிட்டார்கள். இந்த வரிமுறையிலும் காவி கலந்திருப்பதுதான் வேதனையான ஒன்று’’ என்கிறார்.

மொபைல் கடை வைத்திருக்கும் திலகவதி கண்ணனிடம் பேசினோம். ''நாங்க விற்பனை செய்யும் மொபைல் போனுக்கு ஜிஎஸ்டி வந்த பிறகு, 24 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி சுமை வாடிக்கையாளர்கள் தலையில் விழுந்ததுதான். எல்லாவற்றுக்கும் மேலாகப் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் வாங்கக் கூடாது என்கிறார்கள். ஸ்மார்ட் போன் இன்றைக்கு பத்தாயிரத்துக்கு மேல்தான் விற்பனை செய்யப்படுகிறது. கிராமப்புறங்கள் அதிகம்கொண்ட பகுதி சிவகங்கை. கிராமப்புற மக்களிடம் எப்படி டெபிட்கார்டு கிரெடிட்கார்டு எதிர்பார்க்க முடியும். இருபதாயிரம் ரூபாய்க்குக்கூட போன் வாங்க கூலி விவசாயி ரெடியாக இருக்கிறார். அவரிடம் செக் கொடுங்க, டிடி கொடுங்கனு கேட்டா எப்படி விற்பனை செய்ய முடியும். இந்த வரிவிதிப்பு முறையில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. அரசாங்கத்துக்கு வரிப் பணம் சேர்கிறது என்பது ஒருபக்கம் மகிழ்ச்சிதான். ஆனால், நேர்மையான ஊழலற்ற ஆட்சி நடக்குமா, அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை ஊழல் செய்யாமல் இருப்பார்களா. இவர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம். இந்த வரிமுறை வியாபாரிகள் சம்பாதிப்பதை அடித்துப்பிடுங்கும் ஒடுக்குமுறை’’ என்கிறார் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement